ஆடி அமாவாசை தினத்தை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்குமாறு கோரிக்கை

Hinduism Hiniduma Sunil Senevi Thurairajah Raviharan
By Sathangani Jun 10, 2026 05:40 AM GMT
Report

இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை அரச பொதுவிடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றக் குழு அறையில் நேற்று (09) நடைபெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பற்றிய அமைச்சர் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்தநிலையில், இதற்குப் பதிலளித்த புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, குறித்த கோரிக்கையை உரிய முறையில் பரிசீலித்து, விரைவில் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

இந்துக்களின் புனித நாள்

இதன்போது கருத்துத் தெரிவித்த ரவிகரன், "ஆடி அமாவாசை என்பது இந்துக்களின் ஓர் புனித நாளாகும். இந்நாளில் இந்துக்கள் தமது முன்னோர்களுக்காக, குறிப்பாக இறந்த தந்தையர்களுக்காக விரதமிருந்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றி ஆசி பெறுகின்றனர்.

ஆடி அமாவாசை தினத்தை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்குமாறு கோரிக்கை | Request To Aadi Amavasya Day As A Public Holiday

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்திற்குப் பொதுவிடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

எனினும், இந்த நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்த பிற்பாடு இந்த நாளுக்குப் பொது விடுமுறை வழங்கப்படுவதில்லை.

மாதம் தோறும் பௌர்ணமிக்கு விடுமுறை வழங்கும் இலங்கை அரசு, வருடத்தில் ஒரு நாள் வருகின்ற ஆடி அமாவாசைக்கு பொது விடுமுறை வழங்கத் தவறியிருப்பது இந்துக்களுக்குப் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை அதிபர்களின் சம்பள உயர்வு குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை அதிபர்களின் சம்பள உயர்வு குறித்து வெளியான அறிவிப்பு

பதிலளித்த அமைச்சர் 

ஆகவே, இந்துக்கள் தமது புனித நாளில் இடர்பாடுகளின்றி, நிம்மதியாக வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இதனைப் பொது விடுமுறை நாளாக இலங்கை அரசு பிரகடனப்படுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.

ஆடி அமாவாசை தினத்தை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்குமாறு கோரிக்கை | Request To Aadi Amavasya Day As A Public Holiday

இக்கோரிக்கைக்குப் பதிலளித்த அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர், சமய ரீதியாக இந்த விடயங்களைக் கையாள்வதற்கென விசேட குழுவொன்று இருப்பதாகத் தெரிவித்தனர்.

ஆடி அமாவாசை புனித நாளினை அரச விடுமுறையாகப் பிரகடனப்படுத்துவது தொடர்பான விடயம் அந்தக் குழுவிற்குப் பாரப்படுத்தப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றும், அதன் பின்னர் அக்குழுவின் பரிசீலனை முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

அழிவடையும் நிலையில் யாழ். மந்திரிமனை : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

அழிவடையும் நிலையில் யாழ். மந்திரிமனை : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020