கொடூர சித்திரவதை - இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் இடம்பெற்ற படுகொலைகள்; திகிலூட்டும் பின்னணி!
மெக்சிகோ மாகாணம் ஒன்றில் 24 மணி நேர இடைவெளியில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட மூன்று சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மெக்சிகோவின் குரேரோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரபலமான இரு கடற்கரையிலேயே குறித்த மூன்று சடலங்களும் கரை ஒதுங்கியுள்ளன.
கடந்த சனிக்கிழமை மதிய நேரம் காண்டேசா கடற்கரை பகுதியில் இருந்து 911 என்ற இலக்கத்திற்கு அழைப்பெடுத்து பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் ஆண்கள் இருவரின் சடலங்களை கைப்பற்றியுள்ளனர். அதில் ஒருவரது சடலம் சிமெண்டாலான நங்கூரத்துடன் பிணைக்கப்பட்டிருந்தது.
கொடூர சித்திரவதை
இன்னொருவர் முகம் மண்ணில் புதைய கவிழ்ந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை பகல், ஒரு மைல் தொலைவில் உள்ள இகாகோஸ் கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலத்தை கடலில் வீசியிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு கொடூரமாக சித்திரவதைக்கு இலக்கான மூன்று சடலங்களும் நவம்பர் 9ம் திகதி கடலில் மிதந்து காணப்பட்டதாக மெக்சிக்கோவின் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் காவல்துறையால் மீட்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. சடலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் பொதுமக்களை காவல்துறையினர் மீண்டும் அனுமதித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
வருடம்தோறும் ஆயிரக்கணக்கில் படுகொலை
குரேரோ மாகாணத்தின் பிரபலமான Acapulco நகரில் கடந்த ஓகஸ்டு மாதத்தில் மட்டும் 100,000 பேருக்கு 110 படுகொலைகள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு பிறந்தது முதல் மூன்று மாதத்தில் மட்டும் Acapulco நகரில் 213 படுகொலைகள் பதிவாகியிருந்தன. ஆனால், 2021ல் மட்டும் மொத்தம் 442 பேர் குறித்த நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவில், 9 மாதங்களில் 23,351 படுகொலைகள் பதிவாகியுள்ளன. 2021ல் 33,308 பேரும், 2020ல் 34,554 படுகொலைகளும், 2019ல் 34,690 படுகொலைகளும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
