முடிவுக்கு வந்த ரோஹித் ஷர்மாவின் பதவி: புதிய கேப்டனை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் 2024க்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனான ஹர்த்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான ஏலம் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஏலத்திற்கு முன்னதாகவே குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து ஹர்த்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
ரோஹித் ஷர்மாவின் 10 ஆண்டு கால அணித்தலைவர் பதவி முடிவுக்கு வந்ததுள்ளது.
முதல் ஐபிஎல் பட்டம்
ரோஹித் 2013 ஆம் ஆண்டில் ரிக்கி பாண்டிங்கிடமிருந்து இடைக்காலப் பணியை ஏற்றுக்கொண்டார்.
2013 இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் ஐபிஎல் பட்டத்தை பெற்றார்.
ரோஹித் அன்றிலிருந்து தனது வேலையைத் தக்க வைத்துக் கொண்டார், மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியை லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக மாற்றினார்.
ரோஹித்தின் தலைமை
ரோஹித்தின் தலைமையின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி 2015, 2017, 2019, மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பட்டத்தை உயர்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணி உடன் ரோஹித்தின் நம்பமுடியாத வெற்றி, அவர் இந்திய கேப்டனாக உயர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அதன் மூலம் அவர் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் விராட் கோலிக்கு பதிலாக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து 2022 ஏலத்தின் போது ஹர்த்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டார்.
இவரை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியதோடு கப்டனாகவும் நியமித்ததது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கப்டன்
கப்டனான முதல் வருடமே பதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கடந்த வருட ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டி வரை வந்தது.
இந்நிலையில் ஹர்த்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி மறுபடியும் ரூ.15 கோடிக்கு வாங்கியதோடு கப்டனாகவும் நியமித்துள்ளதாக உறுதி செய்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |