இஸ்ரேல் - ஈரான் இடையே நேரடித் தாக்குதல் தீவிரம் : சில பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள்
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நேரடித் துப்பாக்கிசூடுகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக வடக்கு இஸ்ரேல், ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்டை நாடுகளின் வான்பரப்பு மற்றும் நிலப்பரப்பு தன் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படாத வரை, பதற்றத்தைக் குறைக்கத் தாம் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது.
அமெரிக்கா தாக்குதல்
எனினும், வளைகுடா தளங்களிலிருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால், அந்த வாய்ப்பைத் ஜனாதிபதி ட்ரம்ப் பாழாக்கிவிட்டதாக ஈரான் பின்னர் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ஈரானின் இராணுவத் திறனை அமெரிக்கத் தாக்குதல்கள் கணிசமாகச் சேதப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு பிரித்தானியாவின் வான் படைத் தளங்களைப் பயன்படுத்தப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, 24 ஏவுகணைகளைச் சுமந்து செல்லக்கூடிய அமெரிக்காவின் பிரம்மாண்டமான டீ-1 Lancer போர் வானூர்தி பிரித்தானியாவின் RAF Fairford தளத்தில் தரையிறங்கியுள்ளது.
ஹிஸ்புல்லா அறிவிப்பு
ஈரானிலிருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் தமது நிலப்பரப்பை இலக்கு வைத்ததாக கட்டார் உறுதிப்படுத்தியுள்ளது.

லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள நபி சித் நகரில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டதை பிரதமர் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் பெய்ரூட்டின் ஹாரெட் ஹ்ரிக் பகுதியில் இஸ்ரேல் மிகக் கொடூரமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், வடக்கு இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள இஸ்ரேலியப் படைகளைக் குறிவைத்து இன்று தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |