டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் களத்தில்!
Donald Trump
United States of America
By Pakirathan
முழு உலகத்தின் கவனத்தையே திசை திருப்பும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், குறித்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
அதேசமயத்தில், இதற்கு முன்னர் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கான மனு
ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த மைக் பென்ஸும், குடியரசு கட்சி வேட்பாளராக அவரை எதிர்த்து போட்டியிட உள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான மனுவை பென்ஸ் தாக்கல் செய்துள்ள நிலையில், அயோவா மாகாணத்தில் நாளை நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்