கிளிநொச்சியில் இராணுவத்தினரின் வசம் 36 வீத காணிகள் - சிவஞானம் சிறீதரன்

Kilinochchi Ilankai Tamil Arasu Kachchi
By Thulsi Dec 27, 2024 03:30 AM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் நகரத் திட்டமிடலுக்குரிய காணிகளில் 36 வீதமானவை போர் முடிவுற்ற 14 ஆண்டுகளின் பின்னரும் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமல் உள்ளதனால் மாவட்டத்தின் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi ) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (26.12.2024) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) இதனைச் சுட்டிக் காட்டினார்.

சிறுபான்மையினரை புறக்கணிக்குமா அநுர தரப்பு - விடுக்கப்படும் எச்சரிக்கை

சிறுபான்மையினரை புறக்கணிக்குமா அநுர தரப்பு - விடுக்கப்படும் எச்சரிக்கை

அபிவிருத்தியில் பாரிய பின்னடைவு

அவர் மேலும் தெரிவிக்கையில் “கிளிநொச்சி மாவட்ட செயலகவளகம் கலாசார மண்டபம் அமைக்கப்பட்டிருந்த காணி கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பயன்பாட்டுக்கு உகந்த சந்திரன் பூங்கா இருந்த காணி உள்ளிட்ட நகர்ப்புறக் காணிகள் பலவற்றை இன்றளவும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். 

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் வசம் 36 வீத காணிகள் - சிவஞானம் சிறீதரன் | Military Occupation Of Land In Northern Province

அதேவேளை நகரின் முதன்மைப் பாடசாலைகளுள் ஒன்றான கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் மைதானத்திற்கான பாதையை விடுவிக்குமாறு கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட சமநேரத்தில் கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.   

புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்

புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்

மதுபானசாலைகளை மூடும் தீர்மானம்

441 ஏக்கர் விஸ்தீரணம் உடைய வட்டக்கச்சி அரசினர் விவசாய பண்ணையின் 410 ஏக்கர் காணி தற்போது வரையில் இராணுவத்தின் வசமுள்ளது. 

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் வசம் 36 வீத காணிகள் - சிவஞானம் சிறீதரன் | Military Occupation Of Land In Northern Province

இதனை விவசாயத் திணைக்களத்திடம் கையளிக்கும் பட்சத்தில் இந்த மாவட்டத்தின் நூற்றுக்கணக்கானோருக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதால் பொதுப்பயன்பாட்டுத் தேவைகளுக்குரிய காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  

மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கும் வகையில் அமைவிடத்தைக் கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுப்பயன்பாட்டு நிறுவனங்களை அண்மித்தும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைகளை மூடுவதென்ற தீர்மானத்தை நிறைவேற்றி அதன் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பொங்கி எழுந்த அர்ச்சுனா : முற்றிய வாக்குவாதம்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பொங்கி எழுந்த அர்ச்சுனா : முற்றிய வாக்குவாதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024