மேலும் குறையும் பால் மாவின் விலை - அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Milk Powder Price in Sri Lanka
Nalin Fernando
By Pakirathan
கடந்த சில நாட்களாக நாட்டில் பல பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக குறைந்த வண்ணம் உள்ளன.
அந்தவகையில், எதிர்வரும் நாட்களில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இதனை, வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இணக்கம்
பால் மா இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் சமூக வலைத்தள பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி