பெண்களை இலக்கு வைத்து கொள்ளை: கோடீஸ்வரரின் மகன் உட்பட இருவர் அதிரடி கைது!
பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் நாடு திரும்பியவர், மற்றொருவர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் என்றும் தெரியவந்துள்ளது.
இருவராலும் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில், 5 நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கிட்டத்தட்ட 15 ஸ்மார்ட் தொலைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெறுமதிமிக்க தொலைப்பேசிகள்
இந்த கையடக்கத் தொலைபேசிகளின் மதிப்பு சுமார் 2.5 மில்லியன் ரூபாய் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட போலி எண் தகடுகள் கொண்ட மோட்டார் சைக்கிள், இரண்டு முழு முகக்கவசங்கள், 10,900 மில்லிகிராம் போதைப்பொருள், ஒரு பெண்களுக்கான கைப்பை மற்றும் இரண்டு தோள்பட்டை பைகள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இந்த சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு மிகவும் அடிமையானவர்கள் எனவும் அவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 20 பைக்கற்று போதைப்பொருட்களை உட்கொள்வது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
அத்தோடு, பொரலஸ்கமுவ, மிரிஹான, பொரல்ல, அதுருகிரிய, தலங்கம மற்றும் பிலியந்தலை காவல் பிரிவுகளில் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்களின் கைப்பைகள் மற்றும் தொலைப்பேசிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
கொள்ளையடிக்கப்பட்ட கைப்பைகளில் இருந்து பணம் மற்றும் தொலைப்பேசிகளை எடுத்து விட்டு, பைகளை பொல்கொட ஆறு மற்றும் பல்வேறு வனப்பகுதிகளில் வீசியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, மொரட்டுவ பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி கடைக்கு, இரண்டு மதிப்புமிக்க தொலைப்பேசிகள் உட்பட 10க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் உதிரி பாகங்களுக்காக விற்று பணம் சம்பாதித்து போதைப்பொருள் குடித்ததாகவும் காவல்துறையினரால் தெரியவந்துள்ளது.
அத்தோடு, மொரட்டுவ பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி கடைக்கு விற்கப்பட்டிருந்தாலும், கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசிகளில் இருந்து அகற்றப்பட்ட மதிப்புமிக்க பாகங்கள் கொண்ட பல தொலைபேசிகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில், 25 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிலியந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
