நீருக்குள் ஈரான் பதித்த Naval Mine! அமெரிக்க கடற்படைக்கு பாரிய சவால்
உலகின் எண்ணெய் வழங்கலின் சுமார் 20% கடந்து செல்லும் முக்கியமான வளைகுடா கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரான் வியாழக்கிழமை முதல் கடல் Naval mines தாக்குதல் கலன்களை பதியத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க இராணுவம் ஈரானின் கடற்படையை பெருமளவில் அழித்துவிட்டதாகக் கூறியிருந்தாலும்,
எனினும் இன்று வெளியான தகவலின்படி, ஈரான் தற்போது சிறிய படகுகளை பயன்படுத்தி Naval mines - களை பதித்து, வளைகுடா அண்டை நாடுகளுக்கு விதித்துள்ள ஹோர்முஸ் நீரிணை மூடுதலை அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலக எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கை ஈரான் எடுக்கக்கூடும் என்ற சாத்தியம் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் போர் திட்டங்களில் கணிக்கப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம்
இருப்பினும், ட்ரம்ப் நிர்வாகத்துக்கு இந்த நடவடிக்கை எதிர்பாராத ஒன்றாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடக்கூடும் என்ற சாத்தியத்தை தாங்கள் திட்டமிடவில்லை என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடைபெற்ற இரகசிய விளக்கக் கூட்டங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை ஏற்படாமல் தடுக்க திட்டமிடுவது பல தசாப்தங்களாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் அடிப்படை அம்சமாக இருந்தது என்று குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களிலும் பணியாற்றிய முன்னாள் அமெரிக்க அதிகாரி ஒருவர் CNN-க்கு தெரிவித்தார். “இது என்னை முற்றிலும் அதிர்ச்சியடையச் செய்கிறது,” என்றும் அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |