ஆளும் தரப்பின் இரண்டு பெண் எம்.பிக்களுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்
வெற்றிடமாகியுள்ள உள்ள இரண்டு அமைச்சுப் பதவிகளுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் இருவர் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகையுமான கீதா குமாரசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அண்மைய மாற்றங்கள் மற்றும் பல இராஜாஙங்க அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால் பல அமைச்சுப் பதவிகள் காலியாக உள்ளன.
திருமதி கீதா குமாரசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், தனக்கு அரச அமைச்சுப் பதவி வழங்கப்படும் என பல வதந்திகள் பரவி வருவதாகத் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சுப் பதவி குறித்து தனக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை அல்லது விளக்கமளிக்கப்படவில்லை என்றும் திருமதி குமாரசிங்க கூறினார்.
அவ்வாறு அமைச்சுப் பதவி வழங்கினால் அதனை ஏற்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
