வெளிநாடொன்றில் அரிசியால் பறிபோன அமைச்சரின் பதவி
கடைக்கு சென்று அரிசி வாங்குவதில்லை. எனது ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் எனக்கு அரியை பரிசாக கொடுப்பார்கள் எனத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஜப்பான்(japan) விவாய அமைச்சர் டகு இடொ(Taku Eto).
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நான் எப்போதும் கடைக்கு சென்று அரிசி வாங்குவதில்லை. எனது ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் எனக்கு அரியை பரிசாக கொடுப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
ஜப்பானில் உயர்ந்து வரும் அரிசி விலை
ஜப்பானில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜுலை மாதம் அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விவசாய அமைச்சரின் பேச்சு அரசுக்கு எதிரான விமர்சனங்களை மேலும் அதிகரித்தது.
மேலும், டகு பதவி விலகாவிட்டால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.
பதவியிலிருந்து விலகிய அமைச்சர்
இந்நிலையில், அரிசி வாங்குவது குறித்த சர்ச்சை கருத்தை தொடர்ந்து விவசாய அமைச்சர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும், தனது பேச்சுக்கு நாட்டு மக்களிடையே அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
