அமைச்சு பதவியை எதிர்பார்த்த மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்
Johnston Fernando
Ranil Wickremesinghe
Rohitha Abeygunawardana
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
அமைச்சுப் பதவிகளுக்காக அதிபருக்கு சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை இப்போது வழங்க முடியாது என சிறி லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஏனைய வசதிகளுக்கு ஏற்பாடு
அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்க முடியாவிட்டாலும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் ரோகித அபே குணவர்தன, ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ மற்றும் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் அமைச்சு பதவிகளுக்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்