அரசாங்கத்துடன் இணைபவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் தயார்
நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, குமார வெல்கம மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு அமைச்சரவை பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகிய அமைச்சுகளாக இருக்கும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றம்

இன்னும் சில தினங்களில் இவர்களை உள்ளடக்கி அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.இவர்களைத் தவிர மேலும் சில அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் தொடர்ந்தும் எதிர்க்கட்சி உறுப்பினராகவே செயற்பட்டு வருவதாகவும் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.