மக்களின் கடுமையான எதிர்ப்பு! வைபவங்களில் கலந்துக்கொள்ளவதை தவிர்க்கும் அமைச்சர்கள்
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகள் போன்றவற்றில் கலந்துக்கொள்வதை தவிர்த்து வருவதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
எரிவாயு, எரிபொருள், மின்சார நெருக்கடிகள் காரணமாக மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படலாம் என்பதால், இவர்கள் வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை தவிர்த்து வருகின்றனர்.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவிருந்த பல நிகழ்வுகள் கடந்த வாரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார துண்டிப்பு போன்ற காரணங்களால் பொது மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் வைபவங்களில் கலந்துக்கொள்ளும் போது மக்களின் இந்த எதிர்ப்பை தனியாக சந்திக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாக கலந்துக்கொள்ளாது தவிர்த்து வருகின்றனர்.
சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துக்கொள்வதையும் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
