பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்
2024ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச கல்வி அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
இதுவரை பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படாத பாடசாலைகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக பின்வரும் தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சலுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு தெரிவிக்கின்றது.
பாடப் புத்தகங்கள்
பாடப் புத்தகங்களுக்கு பின்வரும் இலக்கங்கள் மற்றும் முகவரிக்கு தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்.

தொலைபேசி எண்கள் – 0112784815/0112785306
தொலைநகல் – 0112784815
மின்னஞ்சல் முகவரி – epddistribution2024@gmail.com
பாடசாலை சீருடை
பாடசாலை சீருடைகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள் மற்றும் முகவரி பின்வருமாறு அமைந்துள்ளன.

தொலைபேசி இலக்கம் – 0112785573
தொலைநகல் – 0112785573
மின்னஞ்சல் முகவரி – schoolupplymoe@gmail.com
எனவே மேற்குறிப்பிட்ட முறைகளின் ஊடாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
        
        காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
23 மணி நேரம் முன் 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        