காணாமற் போன யுவதி : பொதுமக்களை நாடும் காவல்துறை
18 வயதுடைய யுவதி ஒருவர் காணாமற்போன நிலையில் அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்ளை கோரியுள்ளது.
காலி தொடம்துவ பிரதேசத்தில் வசிக்கும் யுவதியே கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் காணாமற் போனவராவார்.
காவல் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு
இவர் காணாமற்போனமை தொடர்பில் ஹிக்கடுவ காவல் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி யுவதி காலி பிரதான பேருந்து நிலையத்தில் நிற்பது, சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தது.
இது தொடர்பில் அவரது தாயார் கூறுகையில், “கடந்த 17ம் திகதி இரவு 9.28 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.. என் மகள்தான் அழைப்பு எடுத்திருந்தார் . ப்ளீஸ் அம்மா என்னைத் தேடாதீங்க.. எனக்கு வர முடியாது.. காவல்துறைக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டாள். அதே சமயம், அங்கிருந்த ஒரு பெண் என்னிடம் காவல்துறைக்கு போக வேண்டாம் என்று கூறினார் என தெரிவித்தார்.