காணாமற்போன சிறுமி காதலனுடன் மீட்பு
பாட்டியுடன் இருந்த சிறுமி காணாமற்போன நிலையில் அவர் தனது காதலனுடன் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உடப்புஸ்ஸலாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார், தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் 14 வயதுடைய தியாகராஜ் சரணியா எனும் சிறுமியே காணாமற் போயிருந்தார்.
பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு
இவர் காணாமற் போனமை தொடர்பில் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தனர். இந்த நிலையில் அவர் தனது காதலன் என கூறிக்கொள்ளும் 18 வயது இளைஞனுடன் வவுனியா நாகர், இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று (10) மதியம் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி இளைஞருடன் தங்கிருந்தமையினை அவதானித்த அயலவர்கள் அப்பகுதி கிராம சேவையாளருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் கிராம சேவையாளருடன் பொதுமக்கள், காவல்துறையினர், சிவில் அமைப்புக்கள், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து சிறுமியை மீட்டெடுத்து வவுனியா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
சிறுமியின் வாக்குமூலம்
இந்த விசாரணையில் தானும் அவ் இளைஞனும் தொலைபேசியூடாக காதலித்ததாகவும் அவருடன் வாழ ஆசைப்பட்டு தான் இங்கே வந்ததாகவும் தெரிவித்தார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் சிறுமி பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு காவல்துறை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்