இங்கிலாந்தில் காணாமல்போன இலங்கை வீரர்கள் கண்டுபிடிப்பு
காணாமல் போன இலங்கை வீரர்களில் இருவர் கண்டுபிடிப்பு
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இருந்து காணாமல் போன இலங்கை வீரர்களில் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகம் தெரிவித்துள்ளது.
பர்மிங்காமில் மர்மமான முறையில் காணாமல் போன இலங்கையைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர், ஆனால் ஒருவரை இன்னும் காணவில்லை.
ஒரு மல்யுத்த வீரர், ஜூடோ நட்சத்திரம் மற்றும் ஜூடோ பயிற்சியாளர் திங்கட்கிழமை முதல் மாயமாகினர் . மூவரும் முன்னதாகவே தங்களது கடவுச்சீட்டை ஒப்படைத்ததால் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியவில்லை.
அவர்கள் காணாமல் போனதை அடுத்து, பர்மிங்காமில் உள்ள இலங்கை அணியில் எஞ்சியிருந்த அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் அதிகாரிகள் தற்போது ஆவணங்களை பெற்றுள்ளனர் .
மூன்றாவது நபரைக் கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை
"இரண்டு பேர் - 30 வயதுடைய ஒரு பெண் மற்றும் 40 வயதில் ஒரு ஆண், ஓகஸ்ட் 1 ஆம் திகதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இருவரும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், . மூன்றாவது நபரைக் கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இலங்கை அணியில் 161 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் விளையாட்டுகளுக்கு முன்னதாக அரசாங்கத்தால் நிலையான 180 நாள் விசாக்கள் வழங்கப்பட்டன.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்