கொழும்பு புறநகரில் ஏற்பட்டுள்ள பதற்றம்! காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கும்பல்
கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலான பிரதேசத்தில் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களது உறவினர்கள் எனக் கூறிக் கொண்ட குழுவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
பதற்றமடைந்த சூழ்நிலை காரணமாக காவல்துறையினரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நேற்றிரவு அருகில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான ஜோந்தியா மற்றும் கலயா ஆகிய இருவரின் உறவினர்கள் எனக் கூறிக் கொண்ட குழுவினர் காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், இருவரும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி குறித்த கும்பல் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.
எப்படியிருப்பினும் உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
