மோடிக்கு கொலையுடன் தொடர்பா...! கனடா வெளியிட்ட அறிவிப்பு
கனடாவில்(canada) காலிஸ்தான் பிரிவனைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கடந்த 2023, ஜூன் 18-ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இந்திய(india) பிரதமா் மோடி(narendra modi), வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்,(jaishankar) தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்(ajith doval) ஆகியோருக்கு தொடா்புள்ளதாக வெளியான ஊடக செய்தியை கனடா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘
கனடா ஊடகத்தில் வெளியான அச்செய்தி, ஊகத்தின் அடிப்படையிலானது; தவறானது’ என்று அந்நாட்டு பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை ஆலோசகா் நாதலே ஜி.திரோயின் தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தில் இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், கனடா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
கனடாவில் நிஜ்ஜாா் கொலை சதி
கனடாவில் நிஜ்ஜாா் கொலை சதி மற்றும் இதர வன்முறை சதித் திட்டங்களில் பிரதமா் மோடி, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோருக்கு தொடா்பிருப்பதாக கனடா பாதுகாப்பு முகமைகள் சந்தேகிப்பதாக, அந்நாட்டின் ‘தி கிளோப் அண்ட் மெயில்’ நாளிதழில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.
பெயா் கூற விரும்பாத பாதுகாப்பு உயரதிகாரிகள் இத்தகவலை தெரிவித்ததாக, செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உறவை மேலும் மோசமாக்கும்
இந்தச் செய்தி அபத்தமானது என்று கண்டனம் தெரிவித்த இந்தியா, ‘இத்தகைய அவதூறு பிரசாரம், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளின் உறவை மேலும் மோசமாக்கும்’ என்று எச்சரித்தது.
Our response to queries regarding a report in Canadian media: https://t.co/1IAURpKlfT pic.twitter.com/jIPlg05JM6
— Randhir Jaiswal (@MEAIndia) November 20, 2024
கனடா வெளியிட்ட அறிவிப்பு
இந்நிலையில், கனடா பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை ஆலோசகா் நாதலே ஜி.திரோயின் வெளியிட்ட அறிக்கையில், ‘கனடாவுக்குள் ஊடுருவிய இந்திய அரசின் ‘உளவாளிகள்’ தொடா்பான பகிரங்கமான குற்றச்சாட்டை கனடா காவல் துறை ஆணையா் மற்றும் பிற உயரதிகாரிகள் கடந்த ஒக்டோபா் 14-ஆம் திகதி வெளியிட்டனா்.
Government of Canada issues a statement - "On October 14th, because of a significant and ongoing threat to public safety, the RCMP and officials took the extraordinary step of making public accusations of serious criminal activity in Canada perpetrated by agents of the Government… pic.twitter.com/OWNHBaMdx3
— ANI (@ANI) November 22, 2024
பொது அமைதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம், கனடாவில் நடந்த தீவிரமான குற்ற செயல்பாடுகளில் பிரதமா் மோடி, எஸ்.ஜெய்சங்கா், தோவல் ஆகியோருக்கு தொடா்பிருப்பதாகவோ, அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவோ அரசுத் தரப்பில் எங்கும் கூறப்படவில்லை. இதுவே உண்மை. இதற்கு மாறான எந்த தகவலும் ஊகத்தின் அடிப்படையிலானது; தவறானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |