இஸ்ரேல் பாணியில் மோடி பின்பற்ற வேண்டிய உத்தி: சர்வதேசத்திலிருந்து வந்த செய்தி!
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இஸ்ரேலின் வரலாற்று நகர்வுகளை இந்தியா தெரிந்து கொள்ளவேண்டும் என சர்வதேச போரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1972 மியூனிக் ஒலிம்பிக் விளையாட்டுப் படுகொலைக்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் கோல்டா மெய்ர் (Golda Meir) என்ன செய்தார் என்பதை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi ) ஆராய வேண்டும் என அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
1972 மியூனிக் படுகொலை (Munich massacre) என்பது, மேற்கு ஜெர்மனியின் மியூனிக் நகரில் கோடைகால ஒலிம்பிக்கின் போது நடந்த பயங்கரவாதத் தாக்குதலாகும்.
மியூனிக் படுகொலை
1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழுவான ப்ளக் செப்டம்பர்-ஐச் சேர்ந்த எட்டு பேர், மியூனிக் ஒலிம்பிக் கிராமத்தை ஆக்கிரமித்து, இஸ்ரேலிய ஒலிம்பிக் அணியின் பதினொரு உறுப்பினர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.
மறுநாள் தோல்வியடைந்த மீட்பு முயற்சியில் பதினொரு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள், ஐந்து பயங்கரவாதிகள் மற்றும் ஒரு ஜெர்மன் காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
மொசாட்டின் ஒபரேஷன் பயோனெட்
அதனை தொடர்ந்து, பயங்கரவாதிகள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களை ஒழிப்பதாக இஸ்ரேல் பிரதமர் கோல்டா மெய்ர் சபதம் செய்திருந்தார்.
இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட்டின் ஒபரேஷன் பயோனெட், பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் கொல்ல ஏழு ஆண்டுகளுக்கும் மேலான உலகளாவிய ரகசிய நடவடிக்கைகளை எடுத்தது.
மோடியின் எச்சரிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த எச்சரிக்கை, இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் கோல்டா மெய்ரின் கருத்துக்களை ஒத்ததாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் வேட்டையாடவும், அவர்களின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அவர்களைத் தண்டிக்க இந்தியா பூமியின் முனைகளுக்குச் செல்லும் என்பதை நான் உலகிற்குச் சொல்ல விரும்புகிறேன்.” என்று பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடி கூறினார்.
இந்த நிலையில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது ஒரு நீண்டகாலப் பணி என்று சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், குறித்த எச்சரிக்கையை போலவே பிரதமர் கோல்டா மெய்ரின், இரகசிய நகர்வுகளையும் மோடி பின்பற்றவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
