விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்: வெளியான மகிழ்ச்சி தகவல்
பெரும் போக காலத்தில் கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டை, அதைப் பெறாத மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, விவசாய மற்றும் விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையால் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த நெற்பயிர்களுக்காக 9,368 விவசாயிகளின் கணக்குகளில் நாளை 202 மில்லியன் ரூபாவை வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இழப்பீடு
திருகோணமலை மாவட்டத்தில் சேதமடைந்த 6,671 விவசாயிகளின் நெற்பயிர்களுக்கு 21 ஆம் திகதிக்குள் 98 மில்லியன் ரூபாய் வங்கி கணக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொலன்னறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கான காப்பீட்டு இழப்பீடாக இதுவரை 306 மில்லியன் ரூபாய் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 17 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்