அதிரப்போகும் மத்திய கிழக்கு! போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல் இராணுவம்
ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை குறைந்தது மேலும் மூன்று வாரங்கள் தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் (IDF) இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
IDF இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “எங்களிடம் இன்னும் ஆயிரக்கணக்கான இலக்குகள் உள்ளன.
எங்கள் அமெரிக்க கூட்டாளிகளுடன் ஒருங்கிணைந்து, குறைந்தது யூதர் திருநாளான பாஸ்ஓவர் வரையிலும் (இன்னும் சுமார் மூன்று வாரங்கள்) நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு அப்பாற்பட்ட மேலும் மூன்று வாரங்களுக்கான ஆழமான திட்டங்களும் தயாராக உள்ளன,” என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் முக்கிய நோக்கம்
IDF தகவலின்படி, ஈரானுக்கு எதிரான நடவடிக்கை கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் விமானப்படை மேற்குப் பகுதி மற்றும் மத்திய ஈரான் பகுதிகளில் சுமார் 400 சுற்று வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் முக்கியமாக இராணுவ உட்கட்டமைப்புகளை சேதப்படுத்துவதையும், தீவிர தாக்குதல், பாதுகாப்பு மற்றும் உற்பத்தி பிரிவுகளில் செயல்படும் பணியாளர்களை குறிவைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், “நாங்கள் நேரக் கணக்குப்படி அல்லது கால அட்டவணைப்படி செயல்படவில்லை. எங்கள் நோக்கம் ஈரான் ஆட்சியை கடுமையாக பலவீனப்படுத்துவதாகும்,” என்றும் இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |