ட்ரம்பிற்கு ஈரானிலிருந்து வந்த தக்க பதிலடி
தெஹ்ரான் "ஒருபோதும் போர் நிறுத்தத்தைக் கேட்கவில்லை, பேச்சுவார்த்தைக்குக் கூட நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி,தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதாகவும் ஆனால் "விதிமுறைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால்" தான் அதில் உடன்பட விரும்பவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கர்களுடன் நாம் ஏன் பேச வேண்டும்
அவரின் இந்தக் கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஈரான் வெளியுறவு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"அமெரிக்கர்களுடன் நாம் ஏன் பேச வேண்டும் என்பதற்கான எந்த காரணத்தையும் நாங்கள் காணவில்லை, ஏனென்றால் அவர்கள் நம்மைத் தாக்க முடிவு செய்தபோது நாங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
"இது ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட போர், நாங்கள் எங்கள் தற்காப்பைத் தொடரப் போகிறோம்." என்றார் அவர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |