வில்பத்து பூங்காவிற்கு சென்ற வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த நிலை
Sri Lanka Tourism
Hospitals in Sri Lanka
Italy
By Jaso
வில்பத்து தேசிய பூங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இத்தாலிய(italy) பெண் ஒருவர் குரங்கு கடித்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் சுற்றுலா சென்றிருந்த போது அவரது கையில் இருந்து வாழைப்பழத்தை குரங்கு பறித்ததில் அவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி
அநுராதபுரம் வைத்தியசாலையின் நான்காம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலிய பெண், தனது விருப்பத்தின் பேரில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்