இந்த ஆண்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலியெடுத்த விபத்துக்கள்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sathangani
இலங்கையில் இந்த ஆண்டு இது வரையான காலப் பகுதியில், பதிவான விபத்துச் சம்பவங்களில் 2,239 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை காவல்துறை ஊடகப்பிரிவு (Sri lanka Police Media) தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி முதல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பாரதூரமான விபத்துக்கள்
அதன்படி, 2,107 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 2,239 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4,149 பாரதூரமான விபத்துக்களும் 7,831 சிறு விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன், 3,295 விபத்துக்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்