வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜுஸ் குடிப்பது நல்லதா..!
Healthy Food Recipes
By Beulah
சாத்தக்குடி ஜுஸிற்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதை வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலில் நிகழும் மாற்றங்களை பற்றி இங்கு விரிவாக காணலாம்.
சாத்துக்குடி ஜுஸ் குடிப்பதன் நன்மைகள்
- இதனில், விட்டமீன் சி அதிகளவில் உள்ளது. அதை உட்கொள்வது, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க செய்கிறது.
- மேலும், இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடண்ட் மற்றும் விட்டமீன் சி உள்ளடக்கம் ஃப்ரீ ரேடிக்கல்களால் சரம திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க செய்கிறது. அத்துடன், கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முகப்பருக்கள் இல்லாத சுத்தமான சருமத்தை பெற உதவுகிறது.
- இந்த ஜுஸினை குடிப்பதன் மூலம், உடலில் விட்டமீன் சி குறைப்பாட்டால் ஏற்படக் கூடிய ஸ்கர்வி நோய் தாக்குதலை தடுக்க முடியும். இந்த நோயானது ஈறுகளில் வீக்கம், அடிக்கடி காய்ச்சல், சளி மற்றும் உதடு வெடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
- அதேவேளை, வெறும் வயிற்றில் இப்பானத்தை குடிப்பதனால், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தப்படுத்திட முடியும் இதன் மூலம், உடலின் உள்ளுறுப்புக்கள் சீராக செயல்படக்கூடும்.
- தினமும் காலையில் சாத்துக்குடி ஜுஸ் குடிப்பது மூளையில் serotonin உற்பத்தியை தூண்டி உடலையும் மனதையும் புத்துணர்வாக்கி மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
- அத்துடன், உடலில் நீர்ச்சத்து இல்லையெனில், மிகவும் சோர்வாக காட்சியளிப்போம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சாத்துக்குடி ஜுஸ் குடிப்பது, உடலின் புத்துணர்ச்சியினை அதிகரித்து, ஆற்றலை அதிகரிக்க செய்யும்.
- சாத்துக்குடியில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதை குறைப்பதோடு, அதன் வளர்ச்சியை அழிக்க செய்கிறது. எனவே, புற்றுநோய் அபாயத்தை குறைக்க தினமுத் சாத்துக்குடி ஜுஸ் குடிப்பது சிறந்த முடிவாகும்.
யார் தவிர்க்க வேண்டும்
- அசிடிட்டி அல்லது மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுவோர் இதனை தவிர்ப்பது நல்லது. அதிலுள்ள அமிலத்தன்மைஈ உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அதேபோல், கர்ப்பினிகளும் சாத்துக்குடி குடிப்பதனை தவிர்க்க வேண்டும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி