ரஷ்யாவை புரட்டிப் போட்ட சம்பவம்: கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட 28 சடலங்கள்
மொஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலை தொடந்து கழிப்பறையில் இருந்து 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதகாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்ய தலைநகரான மொஸ்கோவில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உயிரிழப்புகள்
அதில் பலர் துப்பாக்கி சூடு காயங்களால் உயிரிழந்துள்ளதாகவும் மீதமிருந்தவர்கள் அரங்கில் பயங்கரவாதிகளால் வைக்கப்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு, மீட்கப்பட்டவர்களில் 28 பேரின் சடலங்கள் கழிப்பறையில் இருந்தும் 14 பேரின் சடலங்கள் படிக்கட்டுகளில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், , தாக்குதலுடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலாளர்கள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் ரஷ்யாவின் ஃபெடரல் பாதுகாப்பு சேவை (FSB) தெரிவித்துள்ளது.
புடின் எச்சரிக்கை
அதனை தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு உக்ரைனுக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |