ஈரானுக்குள்ளே மொசாட்டின் இரகசிய தளங்கள் : அரபு நாடுகளின் மீதான தாக்குதலின் பின்னணியில் யார்..!
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்களை அடுத்து வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகள் மீது நடத்தப்படும் ஏவுகணை தாக்குதல்கள் தற்போது பேசுபொருளாக மாறி வருகின்றன.
குறித்த நாடுகள் மீது மேற்கொள்ளப்படும் ஏவுகணை தாக்குதல்கள் ஈரானால் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் அதனை அந்த நாடு உறுதியாக மறுத்து வருகிறது.
அப்படியொன்றால் இந்த தாக்குதலை யார் நடத்துவது என்ற கேள்விக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் மீது சுட்டுவிரல் நீட்டப்படுகிறது.
இதற்கு காரணம் ஈரான் மற்றும் அரபு நாடுகளை நிரந்தர எதிரிகளாக பிரிக்கும் தந்திரமே அது எனவும் இவ்வாறான நாசகார செயல்கள் மொசாட்டிற்கு அத்துபடி எனவும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
எனினும் சவுதியில் உள்ள அமெரிக்க கம்பனிகளுக்கு சொந்தமான எண்ணெய் தளங்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்துமா என்ற கேள்வி மறுபக்கம் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
அப்படியென்றால் இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இருப்பது யார் என்பதை விரிவாக ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |