மனிதர்கள் முதன் முதலில் வளர்த்த செல்லப்பிராணி எது தெரியுமா...!
அர்ஜென்டினாவின் படகோனியாவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு டியூசியோன் அவுஸ் என்று அழைக்கப்படும் நரி இனங்களே வேட்டைக்காரர்களால் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டுள்ளன.
அர்ஜென்டினாவில் உள்ள தொல்பொருள் தளத்தில் அவற்றின் உரிமையாளர்களுடன் குறித்த பழங்கால நரிகளின் எச்சங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
முன்னதாக சில ஆய்வுகள் ஐரோப்பிய நாய்களின் வருகைக்குப் பிறகு மக்கள் நரிகளை செல்லப்பிராணிகளாகப் புறக்கணிக்கத் தொடங்கினர்.
காலநிலை
இருப்பினும் காலநிலை மாற்றத்தின் காரணிகளே அவற்றின் அழிவுக்கு உண்மையான காரணம் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஓபிலி லெப்ராஸ்ஸர் என்பவரால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வின் போது கல்லறையில் உள்ள நபருடன் வேண்டுமென்றே புதைக்கப்பட்ட ஒரு நரியின் எச்சங்களையும் குழு கண்டறிந்ததாக கூறப்படுகின்றது.
நரியின் எச்சங்கள்
ஒரு மனிதனுடன் புதைக்கப்பட்ட நரியின் எச்சங்கள் கனடா செகா தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் எலும்பு மாதிரிகள் தென் அமெரிக்க நரிகளின் லைகலோபெக்ஸ் இனத்தைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பத்தில் கணித்துள்ளனர்.
இருப்பினும் துல்லியமான அளவீடுகள் மற்றும் டிஎன்ஏ பகுப்பாய்வை மேற்கொண்டதில் அது டியூசியோன் அவுஸின் எச்சங்களென பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
நரியின் எலும்புகளில் உள்ள கார்பன் மற்றும் நைட்ரஜன் ஐசோடோப்புகளின் பகுப்பாய்வு, கல்லறையில் புதைக்கப்பட்ட நபரைப் போன்ற தாவரங்கள் நிறைந்த உணவை விலங்கு சாப்பிட்டது என்பதைக் குறிப்பதாக லெப்ராசர் தெரிவித்துள்ளார்.
இறைச்சி
காட்டு நரிகள் பொதுவாக அதிக இறைச்சியை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் கல்லறைக்குள் காணப்படும் நரி மனிதன் எதைச் சாப்பிட்டாலும் அதையே தின்று வளர்ந்ததை அதன் எச்சங்கள் நிரூபித்துள்ளது.
"இந்த நரி வேட்டையாடும் குழுக்களுக்கு மதிப்புமிக்க துணையாக இருந்தது என்பது மிகவும் நம்பத்தகுந்த விளக்கம்" என்று ஆசிரியர்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
நாய்கள் (கேனிஸ் ஃபேமிலியாரிஸ்) முதன்முதலில் தென் அமெரிக்க கண்டத்திற்கு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தன, ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு அவற்றின் பரவல் படகோனியாவின் வடக்கே நின்றுவிட்டதாகத் தெரிகிறது.
நவீன நாய்கள்
இதன் காரணமாக இப்பகுதியில் நாய்களின் முதல் சான்றுகள் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததோடு சில பழங்குடி சமூகங்கள் ஐரோப்பிய வம்சாவளி நாய்களை வளர்க்கத் தொடங்கியபோது இப்பகுதியின் நவீன நாய்கள் முன்பு நினைத்தது போல் நாய்கள் மற்றும் நரிகளின் கலவையிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்பில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1000 ஆண்டுகளில் பெரும்பாலான நாய்களின் எலும்புக்கூடுகளின் மரபணு அமைப்பு மனித குடியிருப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இது நீண்ட காலமாக நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தனித்துவமான உறவைக் குறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |