யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் அவுஸ்ரேலியாவில் அகால மரணம்
Jaffna
Australia
By Jaso
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் அவுஸ்ரேலிய மெல்பேர்ன் நகரில் அகால மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை மெல்பேர்ன் dandenong பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த இந்த பெண் தனது கணவருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பின்னர், தனது மூன்று வயதுக் குழந்தையோடு மெல்பேர்னுக்கு சென்றுள்ளார். அங்கு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தனது குடும்பத்துடன் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
நான்கு பிள்ளைகளின் தாயார்
மேலும் உயிரிழந்த பெண் நான்கு பிள்ளைகளின் தாயார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை விக்டோரிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்