காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்கு நீதி கேட்க அணிதிரண்டுள்ள தாய்மார்கள்
ஆர்ஜன்ரீனாவிலிருந்து இலங்கை வரை காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்கு நீதி கேட்க தாய்மார்கள் ஒன்றாக அணிவகுத்துள்ளனர் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வதுகூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்றுமுன்தினம்(23) ஆரம்பமாகியது. கூட்டத்தொடரில் தொடக்க உரை நிகழ்த்திய போதே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
உலக அரங்கில் அதிகாரபோட்டி
கடந்த 80 ஆண்டுகளாக காணப்படாத வேகத்திலும் தீவிரத்திலும் உலக அரங்கில் அதிகாரம், கட்டுப்பாடு மற்றும் வளங்களுக்கான கடுமையான போட்டி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கு இடையேயும் நாடுகளுக்குள்ளும் உள்ள மோதல்களைத் தீர்க்க பலத்தைப் பயன்படுத்துவது இயல்பாக்கப்பட்டு வருகிறது.
போர்ச் சட்டங்கள் கொடூரமாக மீறப்படுகின்றன, பொதுமக்கள் பெரும் துன்பங்களை நம் கண்முன்னே வெளிப்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |