யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்து- ஸ்தலத்தில் ஒருவர் பலி
யாழ் வடமராட்சி பகுதியில் பார ஊர்தி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று நெல்லியடி மாலுசந்தி மத்திய மகளிர் பாடசாலை முன்பாக இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் கோயில் சந்தையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாலுசந்தி நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், வதிரி நோக்கி சென்றுகொண்டிருந்த பார ஊர்தியுமே் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, யாழில் புகையிரதம் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ராஜ்குமார் ஜெயந்தினி வயது 23 எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் தொழிநுட்ப கல்லூரிக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
