புலம்பெயர் மக்களுக்கு அர்ச்சுனா எம்.பி அறிவிப்பு
புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அறிவித்துள்ளார்.
அந்தவகையில், இன்று முதல் ஒவ்வொரு திங்கள், புதன், சனிக்கிழமைகளில் புலம்பெயர் தமிழ் சமூகம் என்னுடன் நேரடியாக இணைந்து உங்கள் சந்தேகங்களையும், மதிப்புமிக்க ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தனது சமூக வலைதள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தீமைகளே அதிகம்
பதிவில் மேலும் குறிப்பிடுகையில், "டிக்டொக் இதுவரை ஒரு பெரிய தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நன்மைகளை விட தீமைகளே அதிகம்.
பலரின் உண்மையான முகங்கள் இந்த செயலி மூலம் வெளிப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் ஏதோ ஒரு நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இது, பின்னர் பிரபலமடைந்தவுடன் அதன் உள்நோக்கங்கள் மாறி, பலர் தங்கள் சுயரூபத்தை தமிழ் சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
புலம்பெயர் தமிழ் மக்களுடன் தொடர்புகளைப் பேணுவது காலத்தின் தேவை மட்டுமல்ல, அது எங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
டிக்டொக் தளங்கள் எந்தக் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அந்த நோக்கங்களுக்காகவே செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
