ஜனாதிபதி தேர்தல் 2024: வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (21) காலை 7.00 முதல் ஆரம்பமாகியுள்ளது.
அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.
சிவஞானம் சிறீதரன்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்துள்ளார்.
அங்கஜன் இராமநாதன்
அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் உள்ள அளவெட்டி, சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
இராசமாணிக்கம் சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) பட்டிருப்பு ( களுவாஞ்சிகுடி) மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
டக்ளஸ் தேவானந்தா
ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று காலை வாக்களித்துள்ளார்.
ஜீவன் தொண்டமான்
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் கொத்மலை - வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தவிசாளரும், நிதி செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், தலவாக்கலை வட்டகொட - மடக்கும்புர தெற்கு தமிழ் வித்தியாலயத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
எம்.ஏ. சுமந்திரன்
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் யாழ்ப்பாணம் - வடமராட்சி குடத்தனை பகுதியில் உள்ள பாடசாலையில் இன்று காலை வாக்களித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை தலவாக்கலை வட்டகொடை – கலாபுவனம் தமிழ் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் பதிவிட்டார்.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த
அளுத்கமகே, நாவலப்பிட்டி – குருந்துவத்த எம்.எஸ்.அளுத்கமகே தேசிய பாடசாலையில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று வாக்களித்தார்.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினை முதலாவது நபராக பதிவு செய்திருந்தார்.
மேலும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், இன்று வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை நுவரெலியா – நல்லாயன் மகளிர் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் பதிவு செய்தார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சீ.பீ.ரத்நாயக்க, ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கினை நுவரெலியா – இராகலை ஹேரத் மத்திய மகா பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று பதிவிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பீ.திசாநாயக்க ஹங்குராங்கெத்த ரிகல்லகஸ்கட – ஜெயபிம கனிஷ்ட பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |