பிரபல உணவக உரிமையாளரால் கொடூரமாக தாக்கப்பட்ட ஊழியர்...! வைரலாகும் கணொளி
இலங்கையில் மிகவும் பிரபல உணவக உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது உணவக ஊழியர் ஒருவரைத் தாக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மேற்படி காணொளியில் ஊழியர் ஒருவரை மிகவும் கொடூரமான முறையிலும் அவமதிக்கும் வகையில் அவர் நடத்தும் விதம் பதிவாகியுள்ளது.
விற்பனை இலக்கு
விற்பனை இலக்குகளை எந்தவொரு ஊழியரும் எட்டவில்லை என குறித்த ஊழியர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்தோடு ஊழியர்களை அநாகரீகமான வார்த்தைகளால் திட்டிய காட்சி அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்கள் ஊடாக பலரும் தங்களது பதிவுகளை இட்டு அவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மஹரகம காவல் நிலையத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்