இந்தியப்படையின் ஆக்கிரமிப்பு காலத்தில் திருமதி பிரபாகரன் எதிர்கொண்ட ஆபத்துக்கள்!!
இந்தியப் படை ஈழ மண்ணை ஆக்கிரமிக்க ஆரம்பித்த போது திருமதி பிரபாகரன் அவர்களும் குழந்தைகளும் நல்லூர் கந்தசாமி கோவிலில் மக்களோடு மக்களாக அடைக்கலம் தேடியிருந்தார்கள்.
அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி என்று இந்தியப் படையினருக்கோ அல்லது தமிழ் இயக்க உறுப்பினர்களுக்கோ தெரிந்தால் அதோகதிதான். அவரை வைத்தே பிரபாகரன் அவர்களுக்கு வலை விரித்திருப்பார்கள்.
அவரைத் தொலைக்காட்சியில் காண்பித்து அசிங்கப்படுத்தியிருப்பார்கள். அவரது பிள்ளைகளைத் துன்புறுத்தி கொலை செய்திருப்பார்கள்.
அக்காலத்தில் அத்தனை அட்டூழியங்களை இந்தியப் படையினரும், அவர்களுடன் இணைந்திருந்த தமிழ் ஒட்டுக்குழு உறுப்பினர்களும் மேற்கொண்டிருந்தார்கள்.
அப்படி இருக்கையில் இந்தியப் படையினரிடையேயும், தமிழ் இயக்க உறுப்பிர்களிடையேயும் ஒரு வதந்தி வேகமாகக் பரவ ஆரம்பித்தது.
'தலைவர் பிரபாகரன் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் மக்களுடன் மக்களாக மறைந்து தங்கி இருப்பதாக' அந்த வதந்தி வேகமாகப் பரவியது.
பதற்றமான அந்த நாட்களை மீட்டுப்பார்க்கின்றது இன்றை 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்:
