சடை வளர்த்த தோனியின் அதிரடி ஆட்டம் - பழைய தோனியை நினைவு கூர்ந்த ரெய்னா
தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்ட தகவல் தற்போது வைரலாகியுள்ளது.
CSK அணிக்காக 2008 ம் ஆண்டு முதல் சேர்ந்து விளையாட தொடங்கிய தோனியும், ரெய்னாவும் பின்னர் வந்த காலங்களில் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தனர்.
இந்நிலையில் தோனியை முதல் முறையாக சந்தித்த நிகழ்வு குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரெய்னா மனம் திறந்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த போது, நீண்ட முடியை வைத்து கொண்டு ஜார்க்கண்ட் வீரர் ஒருவர் அதிரடியாக விளையாடி வருவதாக கேள்விப்பட்டோம்.
முதல் சந்திப்பு
ஆனால் நாங்கள் தோனியை முதன்முதலில் விடுதி ஒன்றில் தான் சந்தித்தோம், அங்கு அவர் ஓரத்தில் அமர்ந்து கொண்டு பட்டர் சிக்கனும், ரொட்டியும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.
அதைப் பார்த்து எங்கள் அணி வீரர்களில் ஒருவர், இவர் நமக்கு எதிராக பெரிய ஓட்டங்களை எல்லாம் குவிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது, எனவே எந்த பிரச்சனையும் நமக்கு இல்லை என்று தெரிவித்தார்.
ஆனால் அந்த போட்டியில் தோனி பந்துகளை நாளாபுறமும் பறக்கவிட்டார், அதிலும் தோனி குறித்து விமர்சித்த வீரரின் ஓவரை பொளந்து கட்டினார் என்று தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து ரெய்னா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தோனி குறித்து பேசிய அந்த வீரரும் அவருடைய கருத்தை பின்வாங்கி கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
