முல்லைத்தீவில் சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோய்!துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை(படங்கள்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய்பரவலை தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையினருடன் பிரதேசசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள் ,இராணுவம், காவல்துறையினர் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை இன்று (03) காலை தொடக்கம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் சடுதியாக அதிகரித்திகரித்து வருகின்றது.
சிவப்பு எச்சரிக்கை
இதனால் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகள் பரவக்கூடிய சிறிய பாத்திரங்கள் , பிளாஸ்டிக் பொருட்கள், ஏனைய நீர் தேங்கி நிற்ககூடிய பொருட்களை அகற்றுமாறும், டெங்கு அபாய நிலையினை கருத்திற்கொண்டு மக்களை செயற்ப்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |