முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தின் புலனாய்வாளர் சடலமாக மீட்பு
Mullaitivu
Sri Lanka Navy
By Vanan
முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றும் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளையைச் சேர்ந்த குறித்த கடற்படை வீரர் அங்கு புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் நேற்றுமுன்தினம் (15) இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்றுக் காலை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை முக்கிய செய்திகளின் தொகுப்பில் காண்க,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி