தென்னிலங்கைத் தொடர்பால் சீர்குலையும் முல்லைத்தீவு
கஞ்சா - அபின் போன்ற போதைவஸ்த்து பொருட்களின் பயன்பாடு முல்லைதீவு பிரதேசத்தில் அதிகரித்துள்ளது என்றும் தென்னிலங்கை தொடர்பாலேயே இவை இடம் பெறுகின்றது என்றும் முல்லைத்தீவின் முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் பொன்னம்பலம் பேரின்பநாயகம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால் மக்கள் மேலும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகின்றார்கள் எனவும் தெரிவித்த அவர் கூழாமுறிப்பு ஓட்டுத்தொழிற்சாலை, பரந்தன் இரசாயன கைத்தொழிற்சாலை, என்பனவற்றையும் சுட்டிக்காட்டினர்.
வேலைவாய்ப்பு அற்ற நேரங்களில் மக்கள் வடி சாராயம் எனும் போதையை தாமாகவே தயாரிக்கின்றார்கள் என்றும் இவற்றின் மூலம் பாரிய விளைவுகளுக்கு வித்திடுகின்றது எனவும் தெரிவித்தார்,
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி பகுதி - 1
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி பகுதி - 2
