கொக்குத்தொடுவாயில் விசேட ஆய்வு: கொழும்பிலிருந்து வருகை தந்த குழு (படங்கள்)
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வளாகத்தை நவீன ராடர் இயந்திரம் கொண்டு எவ்வளவு தூரத்திற்கு இந்த புதைகுழி விஸ்தரித்துள்ளது தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
குறித்த ஆராய்ச்சியை நடத்துவதற்கு கொழும்பிலிருந்து விசேட அணி ஒன்று தற்போது கொக்குத்தொடுவாய் பகுதிக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதோடு நேற்று(23) மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், இரண்டு மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மொத்த எலும்புக்கூடுகள்
அத்தோடு, எலும்புக் கூடுகளுடன் துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச் சிதறல்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்கத் தகடுகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 26 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |