சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 33 ஆவது மனித புதைகுழி! ஐ.நாவிடம் அவசர கோரிக்கை
முல்லைத்தீவு பாரிய மனித புதைகுழி அகழ்வுக்கு விஜயம் செய்து கையகப்படுத்தி, பொறுப்பெடுக்குமாறு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு விசாரணை ஆணையாளர் ஆகியோருக்கு நாடு கடந்த தமிமீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வொல்கர் துர்க்,( Mr. Volker Turk)ஐக்கிய நாடுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு விசாரணை ஆணையாளர் அல்பான் அலென்கஸ்றோ (Mr. Juan Pablo Alban Alencastro) ஆகியோருக்கு தனித்தனியாக கடிதங்களை அனுப்பியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,
முல்லைத்தீவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி அகழ்வுக்கு பொறுப்பெடுக்குமாறும் அதற்கு அங்கு விஜயம் செய்து கையகப்படுத்துமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
அவசர கோரிக்கை

அகழ்வுப்பணி தொடர்ந்தும் நடைபெறுகையில் அதன் நடைமுறையையும், சர்வதேசக் குற்றங்களுக்கான ஆதாரத்தை நேர்மையாக பாதுகாக்கும் வகையில் அவசர கோரிக்கைகளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கடிதங்களை எழுதியுள்ளார்.
சிறிலங்காவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 33ஆவதான இந்த பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடமானது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


