தனியார் மயமாக்கப்படும் பொதுக்குளம் - நடவடிக்கை எடுக்கத் தவறிய திணைக்களம்! (படங்கள்)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள கமநல சேவை திணைக்களத்திற்கு உட்பட்ட வெள்ளப்பள்ளம் குளம் தனியார் ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்
அதாவது கமநல சேவை திணைக்களத்தினரால் எல்லையிடப்பட்ட குளத்தை தனியார் ஆக்கிரமிப்பதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ளவதை நேரடியாக அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
உடனடி நடவடிக்கை
இதன் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்று இது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக குளத்தை எல்லையிடப்படுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் அசமந்த போக்காக உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.




