முறையற்ற மலக்கழிவகற்றல் திட்டம்: துணுக்காய் பிரதேச சபை செயலாளரால் வெடித்த சர்ச்சை
முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச சபை செயலாளர் காவல்துறையில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.
குறித்த முறைப்பாடு, மல்லாவி காவல்துறையில் நேற்று (09) மாலை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட கழிவு அகற்றும் பகுதியில் மலக்கழிவுகளை கொட்டியதால் அக்கழிவுகள் பேரிடர் மழைக்காலத்தில் குளங்கள் மற்றும் மக்களின் குடியிருப்புக்குள் சென்றதன் காரணத்தினால் மக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
குறித்த போராட்டம் கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற நிலையில், இதில் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தநிலையில், தற்போது பிரதேச செயலகத்தால் மாற்று இடம் வழங்கப்பட்டும் அங்கு கழிவுகளை அகற்றாமல் அதனையும் மீறி செயலாளர் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, உறுப்பினர்கள்தான் மக்களை கூட்டியதாகவும் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தியதாகவும் இது தவறு என கூறி மல்லாவி காவல்துறையில் பிரதேச சபை செயலாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்கு முன்னிலை
இதனடிப்படையில், இன்று (10) சபையின் மூன்று உறுப்பினர்களான சி.சிந்துசன், ச.சுயன்சன் மற்றும் த. தனுசந்தன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது சபை தவிசாளர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளனர்.

விசாரணையில் கருத்து தெரிவித்த பொறுப்பாதிகாரி, மக்கள் நலன் கருதி மாற்று இடத்தில் கழிவுகளை கொட்டுமாரு தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்வரு 18 முடிவெடுக்க வேண்டும் என தவிசாளர் தெரிவித்த நிலையில், முடியாது பழைய இடத்தில்தான் கழிவு கொட்ட வேண்டும் என மக்கள் நலன் கருதாது செயலாளர் தெரிவித்ததாக பிரதே சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |