56 ஆண்டுகளாகியும் பேருந்து தரிப்பிடம் இல்லை: முள்ளிபொத்தானை மக்களின் அவலநிலை
திருகோணமலை நகருக்கு அடுத்ததாகக் காணப்படும் முள்ளிபொத்தானை நகரில் கடந்த 56 ஆண்டுகளாக முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாதிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தம்பலகாமம் பிரதேச சபை அலுவலகமே இந்த பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் அமைந்துள்ளது.
இதனடிப்படையில் இவ்வாறான முக்கியமான இடத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள்
நாட்டின் பல பகுதிகளிலும் நவீன பேருந்து தரிப்பிடங்கள், ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள் எனப் பொதுப் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் முள்ளிபொத்தானை மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதியான ஒரு முறையான பேருந்து தரிப்பிடம் கிடைக்காதது கவலைக்குரிய விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, முள்ளிபொத்தானை நகரின் பொதுமக்களின் நீண்டகாலத் தேவையைக் கருத்திற்கொண்டு இவ்விடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய முறையான பேருந்து தரிப்பிடமொன்றை அமைத்துத் தருவதற்கு உரிய அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

