பெரும் குழப்பத்திற்கு மத்தியில் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - இராணுவம் குவிப்பு (படங்கள்)
கொழும்பு பொரளை பொது மயான சுற்றுவட்டாரத்திற்கு அருகில் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சீர்குலைக்கும் வகையில் ஒரு குழுவினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுக்கூறுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தும் இந்நிகழ்விற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கோசங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தலைமையில் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது
அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர்
அத்துடன் சம்பவம் தொடர்பில் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் நிலைமைகளை சுமுகமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18.05.2023) உணர்வு பூர்வமாக தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு பொரளை பொது மயான சுற்றுவட்டாரத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் வெள்ளை மலர்களுடன் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
