முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - யாழ். பல்கலையில் ஆரம்பமானது!
Jaffna
Mullivaikal Remembrance Day
University of Jaffna
By Pakirathan
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (12) ஆரம்பமானது.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது.
மலரஞ்சலி, ஈகைச்சுடர்
ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவேந்தலின்போது, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இறுதியில், மாணவர்களால் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி