இலங்கையில் பல மில்லியன் மோசடி - சிக்கிய 39 சீனர்கள்!
பல நாடுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து மில்லியன் கணக்கிலான பணத்தை இணையத்தளத்தின் ஊடாக மோசடி செய்த சீனர்கள் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை சந்தேகத்தின் பேரில் இன்றையதினம் கைது செய்துள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தூதரகங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் ஊடாக, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த 39 சீனர்களும் சிக்கியுள்ளனர்.
சீனர்கள் கைது
அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் பல நாட்களாக தங்கியிருந்து இவர்கள் குறித்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர்களிடமிருந்து கணினிகள், மதிப்பு மிக்க திறன்பேசிகள் மற்றும் பெருந்தொகை பணத்தை காவல்துறை கைப்பற்றியுள்ளது.
சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
