நல்லூர் திருவிழாக்களில் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த உடமைகள்: மாநகர சபையில் முக்கிய அறிவிப்பு
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின் போது பக்தர்களால் தவறவிடப்பட்ட உடமைகள் மாநகர சபையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களால் தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ்.மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உரியவர்கள் தகுந்த அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
பெறுமதி வாய்ந்த பொருட்கள்
பக்தர்களால் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை அட்டை, பணப்பைகள், மணிக்கூடு, தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள் என்பன யாழ்ப்பாணம் மாநகர சபையின் உற்சவகாலப் பணிமனையில் ஒப்படைக்கப்பட்டு தற்போது மாநகர சபை அலுவலகத்தில் உள்ளன.
உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி மாநகர சபையின் நிர்வாக கிளையில் பிற்பகல் 2.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
